Subject: Salangai pooja - movie salangai oli
Message: #1(970)  2024-10-28
கள்ளாமை
உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல்.   (௨௱௮௰௨ - 282) 
விளக்கம் ஓவியம்
‘பிறன் பொருளைக் கள்ளமாகக் களவாடிக் கொள்வோம்’ என்று ஒருவன், தன் 
உள்ளத்தால் நினைத்தாலும் அந்த நினைவு கூடத் தீமையானதே  (௨௱௮௰௨)
— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

குற்றமானதை உள்ளத்தால் எண்ணுவதும் குற்றமே, அதானால் பிறன் பொருளை அவன் 
அறியாதப் வகையால் வஞ்சித்துக்கொள்வோம் என்று எண்ணாதிருக்க வேண்டும்.  (௨௱௮௰௨)
— மு. வரதராசன்

அடுத்தவர் பொருளை அவருக்குத் தெரியாமல் திருடுவோம் என்று மனத்தால் நினைப்பதும் தீமையானது.  (௨௱௮௰௨)
— சாலமன் பாப்பையா

பிறருக்குரிய பொருளைச் சூழ்ச்சியினால் கவர்ந்து கொள்ளலாமா என்று ஒருவன் 
நினைப்பதேகூடக் குற்றமாகும்  (௨௱௮௰௨)
— மு. கருணாநிதி