திருமுருக அருணகிரிநாதர் அருளிய கந்தர் அநுபூதி (43-45) 43. ஆசானாகி அனுக்கிரகிக்க தூசாம் அணியும் துகிலும் புனைவாள் நேசா முருகா நினதுஅன்பு அருளால் ஆசா நிகளம் துகள் ஆயினபின் பேசா அநுபூதி பிறந்ததுவே. 44. குரு மந்திரம் பெற சாடுந் தனிவேல் முருகன் சரணம் சூடும் படி தந்தது சொல்லுமதோ வீடும் சுரர்மா முடிவே தமும்வெம் காடும் புனமும் கமழுங் கழலே. 45. கல்வியிற் சம்பாவிக்க கரவாகிய கல்வியுளார் கடைசென்று இரவா வகை மெய்பொருள் ஈ குவையோ குரவா குமரா குலிசாயுதகுஞ் சரவா சிவயோ கதயா பரனே. வேலும் மயிலும் துணை! கந்தர் அனுபூதி.... தொடரும்...
Showing results 0 to 1 of 2