Message: #0 2022-06-18  
அநுபூதி பாடல் வரிகள் kandar
anuboothi lyrics in tamil
கந்தர் அனுபூதி என்னும்
நூல் அருணகிரிநாதர்
என்பவரால் பாடப்பட்டது.
அருணகிரிநாதர் 15ஆம்
நூற்றாண்டில் வாழ்ந்த
புலவர்.
அனுபூதி என்னும் சொல்லினை
அனு + பூதி என்று
பிரிக்கலாம்
“அனு” என்பது அனுபவம்.
“பூதி” என்பது புத்தி. இது
(அறிவு). அறிவின் பூரிப்பு.
அனுபவ அறிவின் பூரிப்பே
அனுபூதி.
இந்த நூலில் 51 பாடல்கள்
உள்ளன.
பாடல்கள் எதுகைத்தொடை
ஓட்டத்தால் சந்தச்சுவை
உடையனவாக உள்ளன.
பத்தாம் திருமுறை
திருமந்திரம் நூலுக்கு
ஒப்பாக இந்த நூல்
கொள்ளத்தக்கது எனச்
சமயவாணர்கள்
கூறுகின்றனர்.
திருமூலர் இடையன்
உடலுக்குள் புகுந்து
திருமந்திரம் சொன்னாராம்.
அதுபோல அருணகிரிநாதர்
கிளி உடலுக்குள்
இருந்துகொண்டு இந்த
நூலைச் சொன்னார் எனக்
கூறுவர்.
காப்பு
நெஞ்சக் கன கல்லு
நெகிழ்ந்து உருகத்
தஞ்சத்து அருள்
சண்முகனுக்கு இயல்சேர்
செஞ்சொற் புனை மாலை
சிறந்திடவே
பஞ்சக்கர ஆனை பதம்
பணிவாம்.
நூல்
ஆடும் பரி, வேல், அணிசேவல்
எனப்
பாடும் பணியே பணியா
அருள்வாய்
தேடும் கயமா முகனைச்
செருவில்
சாடும் தனி யானைச்
சகோதரனே. (1)
உல்லாச, நிராகுல, யோக இதச்
சல்லாப, விநோதனும் நீ
அலையோ?
எல்லாம் அற, என்னை இழந்த
நலம்
சொல்லாய், முருகா சுரபூ
பதியே. (2)
...more |