VijayramOnline Blogging
==============================================================================
Subject: மருத்துவத்தில் இருந்து மனமற்ற நிலை வரை
Message: #1  
இன்றைக்கு, உலகத்தின் எந்த
நாட்டையும் விட, அதிகமான
அமைதியின்மையையும்,
ஏக்கத்தையும் சந்திக்கிற
நாடு அமெரிக்காதான். வேறு
எந்தச் சமூகத்திற்கும்
இல்லாத அளவிற்கு வசதிகள்
அமெரிக்காவில் தான் இன்று
இருக்கின்றன. ஆனால்
உண்மையில்
அமெரிக்காவில்தான் முதல்
முறையாக ஒருதெளிவு
ஏற்பட்டிருக்கிறது. முதல்
முறையாக மாயையகள்
உடைபட்டிருக்கின்றன.
தன்னுடைய துன்பங்களுக்கு
ஏதோ ஒரு காரணமிருக்கிறது
என்று மனிதன்
நினைப்பதுண்டு. தன்னுடைய
துன்பத்திற்கு எந்த ஒரு
காரணமும் இல்லை. தான்
மட்டுமே காரணம் என்கிற
தெளிவு முதல் முறையாக
அமெரிக்காவில்
வந்திருக்கிறது. புதிய
துன்பங்களைத் தானே
கண்டுபிடிக்கிறான்.
அவனுக் குள்ளிருக்கிற
குணாதிசயம் அவன் இல்லாத
ஒன்றை தொடர்ந்து கேட்டுக்
கொண்டேயிருக்க வேண்டும்
என்று சொல்கிறது. இந்த நிலை
ஒவ்வொரு நாளும்
அர்த்தமில்லாமல் போய்க்
கொண்டேயிருக்கிறது.
அதனால் ஏற்கெனெவே
சாதித்தது கூட
அர்த்தமில்லாத,
அற்பமானதாகத் தெரிகிறது.
அதனால் இல்லாத
ஒன்றிற்காகத் தொடர்ந்து
போராடுகிறான்.
நடக்கமுடியாத இரண்டு
காரியங்களுக்கு இடையே
கட்டப்பட்ட பாலம்தான்
மனிதன் என்று நீட்ஷே எங்கோ
சொன்னார். இயலாத
காரியத்தைச் சாதிக்க ஓர்
ஆர்வம். முழுமையடைய ஓர்
ஆர்வம். இந்த முழுமையடைகிற
ஆர்வத்தில்தான் எல்லா
மதங்களுமே பிறந்தன.

Osho. Maruthuvathilirunthu Manamattra Nilai Varai (Tamil Edition) .
Kannadhasan Pathippagam. Kindle Edition. 
Submit your reply
==============================================================================
Subject: மருத்துவத்தில் இருந்து மனமற்ற நிலை வரை
Message: #0  
ஓஷோ 1931 டிசம்பர் 11 இல்
மத்திய பிரதேசத்தில் உள்ள
குச்வாடா என்ற சிற்றூரில்
பிறந்தார். குச்வாடா
ஓஷோவுடைய தாய் வழி தாத்தா,
பாட்டி வாழ்ந்து வந்த ஊர்.
முதல் ஏழு வருடங்கள்
அங்கேதான் வளர்ந்தார்.
ஓஷோவுடைய பெற்றோர்கள்
கடர்வாடாவில் வசித்து
வந்தார்கள். தாத்தா இறந்த
பிறகு பாட்டியுடன்
கடர்வாடா வந்து விட்டார்.

ஓஷோவுடைய இயர்பெயர்
ரஜ்னீஷ் சந்திர மோகன். சிறு
வயதிலிருந்தே தியானத்தில்
ஈடுபட்ட ஓஷோ தன்னுடைய
இருபத்து ஒன்றாவது வயதில்
அதாவது 1953 மார்ச் 21 இல்
ஞானம் அடைந்தார்.
கிழக்கில் ஞானமடைதல்
என்பது முழுமையான
தன்னுணர்வு அல்லது
விழிப்புணர்வு நிலை
என்பதை குறிப்பிடுவதாகும்
கெளதமபுத்தர், கபீர்,
இரமணர் மற்றும் பலர்
இப்படி ஞானம்
அடைந்தவர்களாவர்.
Submit your reply
==============================================================================

 Next 1 >>

Showing results 0 to 1 of 323

 Print this Page
       

==============================================================================