VijayramOnline Blogging
==============================================================================
Subject: தர்மம், ஞாயம், மோட்சம்
Message: #1  
Submit your reply
==============================================================================
Subject: தர்மம், ஞாயம், மோட்சம்
Message: #0  
ஏகம் படைத்துக் காக்கும்
ஆண்டவர் நாராயணரும்,
பத்தவதாரங்களும்
(Ten avatars of Lord Narayana)
அன்பான அய்யாவின்
பிள்ளைகளே! உங்களுக்கு
தெரியுமா..? 
அண்ட சராசரங்களையும்
படைத்துக் காக்கும்
ஆண்டவர் நாராயணர் உலகில்
பல்வேறு உயிர்களைத்
தாேற்றுவித்து கால
வர்த்தக பரிமாணங்களை
நடத்தி வருகின்றார்.
இவ்வுலகில் #தர்மம்
அழிந்து அதர்மம் ஓங்குகிற
சமயம் நான் "நல்லாேரைக்
காக்கவும், தீயாேரை
அழிக்கவும், தர்மத்தை
நிலைநாட்டவும்", நான் யுகா
யுகம் தாேறும் உலகத்தில்
அவதாரம் எடுக்கிறேன்
என்று கூறியதை பாேல, யுகா
யுகம் தோறும் நமக்காக
அவதரித்தார்.
இக்கலியுகத்திலும்
ஸ்ரீமன் நாராயணர் தாமே
வைகுண்டமாய்த் தோன்றி
நம்மை இரட்சித்தார்.
யதா யதா ஹி தர்மஸ்ய
க்லானிர்பவதி பாரத|
அப்யுத்தானமதர்மஸ்ய
ததாத்மானம் ஸ்ருஜாம்யகம்||
(4-7)
பரித்ரானாய சாதூனாம்
வினாஷாய ச துஷ்க்ருதாம்|
தர்மசம்ஸ்தாபனார்த்தாய
சம்பவாமி யுகே யுகே|| (4-8) :
பகவத் கீதை
(எப்போதெல்லாம் தர்மம்
வலுக்குறைந்து அதர்மம்
ஓங்குகின்றதோ
அப்போதெல்லாம் நான்
நல்லவர்களைப்
பாதுகாக்கவும் தீயவர்களை
அழித்திடவும் தர்மத்தை
உறுதியாக ஸ்தாபித்திடவும்
யுகத்திற்கு யுகம் நான்
அவதரிக்கின்றேன்)
"ஐந்துதலை நாகத்தின்மேல்
பள்ளிகொள்வ தறியவில்லையா
#பத்தவதாரம் பிறந்த
பாதைகளைச் சொல்மகனே" -
ஸ்ரீமன் வைகுண்டர்
அப்படியே நல்லதென்று அரனு
முமையாளும்
முப்படியே மாலினிக்கு
ஒன்பதாம் பேறெனவும்
வேதனுக்கோ ராயிரம் பிறவி
யாச்சுதென்றும்
மாது உமைக்கு வளர்பிறவி
ஏழெனவும்
திதுவுக்கோர் பத்தாம்
செய்யப் பிறவியென்றும்
சதுர்மறைக் கேழெனவும்
சாஸ்திரத்துக்
கோர்நான்கும்
வானவர்கோன் றனக்கு
வளர்பிறவி மூன்றெனவும்
தானவர்க் கேழெனவும்
சரசுபதிக் காயிரமாம்
தொண்டர் தமக்கு சூல்பிறவி
யொன்றெனவும்
அண்டர்கள் மெய்க்க அரனடன
மாடலுற்றார்
நாதன் முறையார்க்கு
நற்பிறவி யொன்றுபத்தாம்
வேதன் றனக்குப்பிறவி
ஆயிரமாம் - வெண்டரள
மாதுக்கு மாயிரமாம்
மாதுமைக் கோரேழாம்
சீதுக்குப் பத்தெனவே
செப்பு - அகிலத்திரட்டு
நாலுமூணு யுகமும்
நடுத்தீர்க்க வந்தபிரான்
மற்றும் நாதன்
முறையார்க்கு நற்பிறவி
யொன்றுபத்தாம் என்ற
அகிலத்திரட்டு வாக்கு
படியும், மற்றும்
அருள்நூலின் காக்கும்
பதிகம் வரிசை படியும், இதாே
இந்த #பத்தவதாரங்கள்
உங்களுக்காக..
1 - வது அவதாரம்: அய்யா மச்ச
அவதாரம்
யுகம்: கிரேதா யுகம்
அவதார நோக்கம்: இறைவேதம்
மற்றும் உலகத்தை
காப்பதற்கு
மச்சவதாரன் மனதில்மிகக்
கொண்டாடி
மாதே வுனக்கு வளர்பிறவி
பத்தெனவும் -
அகிலத்திரட்டு
சுருதியைத் திருடிப்போன
சோமுகாவசுரன் தன்னை 
திரைகட லுலகினுள்ளே
சென்று கொன்றவனே,
நேமிக் கரமுடை கமலக்கண்ணா
கர்த்தனாகிய கார் வர்ணா, 
தெருள்செக நாத தேவா!
சீக்கிரம் காக்க வாவா!! - 
காக்கும் பதிகம், அருள்
நூல்
2 - வது அவதாரம்: அய்யா கூர்ம
அவதாரம்
யுகம்: கிரேதா யுகம்
அவதார நோக்கம்:
தேவாமிர்தம் தேவர்களாகிய
நமக்கு கிடைத்திட
தேவர்களும் அசுரர்களும்
பாற்கடலைக் கடைந்த போது,
மந்திரமலையைத் தாங்க
திருமால் எடுத்த ஆமை
அவதாரமே கூர்மாவதாரம்
முன்னேநீ ரமிழ்தம்
உவரிதனிற் கடைய
என்னை யொருபுறமாய்
ஏவல்கொண்ட மாயவரே -
அகிலத்திரட்டு
கரைகடல் கடையும்போது
காயகச் சபமாய் நீமந்
தரமலை யாழ்ந்திடாமல்
தாங்கிய தயவேதையா!
முரஹரி எழிலார் மெய்யா!
மூடனேன் முனிவேனையா
தெருள்செக நாததேவா!
சீக்கிரம் காக்க வாவா!! - 
காக்கும் பதிகம், அருள்
நூல்
3 - வது அவதாரம்: அய்யா வராக
அவதாரம்
யுகம்: கிரேதா யுகம்
அவதார நோக்கம்: ஆண்டவனாகிய
அய்யா அண்ட சராசரங்களை
படைத்து காப்பவர் என்பதை
நமக்கு உணர்த்த
வராகமா யுதித்த மாயன்
மனுவெனப் பிறக்க - 
அகிலத்திரட்டு
தரைதனைச் சுருட்டி
யாழ்ந்து தொளித்திருந்த
இரணியரக்கனை வராக எழிலுரு
வெடுத்துக் கொன்ற
பரமனே பத்மநாபா!
பரஞ்சோதியான தீபா!
தெருள்செக நாத தேவா!
சீக்கிரம் காக்க வாவா!! -
காக்கும் பதிகம், அருள்
நூல்
4 - வது அவதாரம்: அய்யா
முருகன் (கந்தன்) அவதாரம்
யுகம்: கிரேதா யுகம்
அவதார நோக்கம்: பரம்பொருள்
சிவபெருமானிடம் பெற்ற
வரத்தின் பலத்தால் யாரும்
தன்னை வெல்ல முடியாது என்ற
ஆணவத்தால் வந்த சூரனின்
அகங்காரம், மற்றும்
அநியாயங்களை மாற்றி வைக்க
ஆறு முகமாய் ஆய னளவிடவே
கூறிடவே சத்திதனைக்
கொண்டார்வே லாயுதமாய்
நல்ல சிவனாரை நந்தீ
சுரராக்கி
வல்ல பெலமுள்ள
வாய்த்ததிக்
கெட்டிலுள்ளப்
பாலரையும் வீரர்களாய்ப்
பண்ணினா ரெம்பெருமாள்
வாலமுள்ள சன்னாசி மாரைப்
பெரும்படையாய்க்
கந்தனெனும் நாமம்
கனத்தசடை யாண்டியுமாய்க்
கொந்துகொந்தாய்ப்
பீற்றைக் கூறைமிக வணிந்து
வேலு மிகப்பிடித்து
வெண்ணீறு மேதரித்து
நாலுரண்டு சிரசில்
நல்லருத்தி
ராச்சமிட்டுப்
பத்துரண்டு காதில்
பசும்பொன்னொவ்வாச்
செம்பணிந்து
முத்திரிக ளிட்டுக்கந்தப்
பொக்கணங்கள்
தோளிலிட்டுச்
சன்னாசி போலே தானடந்
தெம்பெருமான் -
அகிலத்திரட்டு
5 - வது அவதாரம்: அய்யா
நரசிம்ம அவதாரம்
யுகம்: கிரேதா யுகம்
அவதார நோக்கம்: எங்கும்
நிறைந்த ஆண்டவனாகிய அய்யா,
அன்புள்ள பக்தர்கள்
நினைத்ததும் வந்து
காப்பவர், #தூணிலும்
இருப்பான் #துரும்பிலும்
இருப்பான் என்பதை உணர்த்த
வாயல் நடையில்வைத்து
மாபாவிச் சூரனையும்
நெஞ்சை யவர்நகத்தால்
நேரேப் பிளந்துவைத்து
வஞ்சக னோடே மாயன் - 
அகிலத்திரட்டு
பிரகலா தனக்காய்த் தூணில்
பெருநர ஹரியாய்த் தோன்றி
இரணியன் றனை வதைத்த ஈசனே,
நெடிய மாலே
பிரமனைப் பெற்ற தாதா!
பேதயேற் கருள்செய் நீதா!
தெருள்செக நாததேவா!
சீக்கிரம் காக்க வாவா!! - 
காக்கும் பதிகம், அருள்
நூல்
6 - வது அவதாரம்: அய்யா வாமன
அவதாரம்
யுகம்: திரேதா யுகம்
அவதார நோக்கம்: இவ்வுலகில்
எவரவர் இருந்து மணியம் 
பண்ணவேணுமானாலும்
(அரசாளுதல்) அய்யா
நாராயணரின் முக்கால்
அடிக்குள்தானே என்பதை
உணர்த்த
மண்ணளந்த நாதன் மனமகிழ்ந்
தேயிருந்து
சாமி யருகில்
சூழ்ந்திருந்த
சான்றோர்கள்
நாமினித்தான் செய்வதென்ன
நாதனே யென்றுசொல்லி
கேட்டுநா ராயணரும்
கீழ்ச்சுண்டுக்
குள்மகிழ்ந்து
நாட்டுக் கரிவிரிநாள்
நாரா யணனும்நான்
பட்சி பறவை பலசீவ
செந்துக்களை
நிச்சயமாய்ப் படைத்த
நீலவண்ண நாதனும்நான்
மண்ணே ழளந்த மாயப்
பெருமாள்நான்
விண்ணே ழளந்த விஷ்ணு
திருவுளம்நான்
ஏகம் படைத்தவன்நான்
எங்கும் நிறைந்தவன்நான்
ஆகப்பொருள் மூன்றும்
அடக்கமொன் றானதினால்
நாதக் கடல்துயின்ற நாகமணி
நானல்லவோ
சீவசெந்துக் கெல்லாம்
சீவனும் நானல்லவோ
இந்நீச னெல்லாம் என்னையறி
யாதிருந்தால்
மின்னிலத்தில் நான்படைத்த
மிருக மறியாதோ  -
அகிலத்திரட்டு
திரமகாபலி பாதாளம்
சேர்விபு! உலகளந்த
சரணனே வாமன அவதார கெம்பீர
கூரா!
வரையுறு மகளெ னும்பார்
வதியணா! துளப மார்பா!
தெருள்செக நாததேவா!
சீக்கிரம் காக்க வாவா!! - 
காக்கும் பதிகம், அருள்
நூல்
7 - வது அவதாரம்: அய்யா
#பரசுராமர் அவதாரம்
யுகம்: திரேதா யுகம்
அவதார நோக்கம்: ஜமதக்னி
முனிவருக்கும்,
ரேணுகாவுக்கும்
ஆண்டவனாகிய அய்யா மகனாக
பிறந்ததே #பரசுராம அவதாரம்.
தந்தை சொல் மிக்க மந்திரம்
இல்லை என்பதை உலகத்திற்கு
உணர்த்திய அவதாரம்.
சரசு பதிமாதும் தாயீசொரி
யாளும்
பரசுரா மன்முதலாய்ப்
பண்பாய்
மகிழ்ந்திருந்தார் -
அகிலத்திரட்டு
அரசர்கள் தமையடக்கி,
அந்தணர் தம்மைக் காத்த,
பரசுராமா! கோபாலா!
பரந்தாமா! மேருவில்லா!
விரிமறை தேடும் மூலா!
வேலையிற் றுயின்ற தூயா!
தெருள்செக நாததேவா! 
சீக்கிரம் காக்க வாவா!! - 
காக்கும் பதிகம், அருள்
நூல்
8 - வது அவதாரம்: அய்யா ராமர்
அவதாரம்
யுகம்: திரேதா யுகம்
அவதார நோக்கம்: ஒரு பெண்ணை
அவள் கணவனிடம் இருந்து
பறிப்பது மகா பாவம்.
பத்தினியின் சாபம்
அனைவரையும் அழித்து
விடும். ஒரு தவறைத் தட்டிக்
கேட்காமல் இருப்பதும் கூட,
அந்தத் தவறுக்கு துணை
போவது போல்தான் என்பதை
உணர்த்தும் #ஆண்டவனின்
அவதாரம் இது.
இராவணன் தன்னைக் கொல்ல
இராம பாணங்க ளோடே
ஸ்ரீராம ராய்மாயன் தானும்
தசரதன் தனக்குத் தோன்ற
விராகன மாது சீதை வில்லுட
னுதிக்கத் தேவர்
மராம ரக்குலங் களாகி
வந்தனர் புவியின் மீதே -
அகிலத்திரட்டு
இருடிகள் தவம் செழிக்க,
இராவணன் தனை வதைக்க,
தரைதனில் வந்த ராமா! 
சாஸ்வதா சங்கு வாமா!
முருகனுக் கிசைந்த மாமா,
முறையிடு மெனையாள் சோமா!
தெருள்செக நாத தேவா!
சீக்கிரம் காக்க வாவா!! - 
காக்கும் பதிகம், அருள்
நூல்
9 - வது அவதாரம்: அய்யா
கிருஷ்ண அவதாரம்
யுகம்: துவாபர யுகம்
அவதார நோக்கம்:
பாண்டவர்கள் மற்றும்
தர்மிகளான ஏழை எளிய
மக்களுக்கு பகையாக
விளங்கிய அதர்மவாதிகளை
அழித்து, தர்மிகளுக்கு
பச்சைமாலே தஞ்சம் என்பதை
உணர்த்த
ஸ்ரீகிருஷ்ண னாகத் திருமா
லுதித்தபின்பு
குறுக்கிட்ட தோசம் கொடுமை
மிகத்தீர்ந்து
பின்னே பதவிப் பேறுண்டு
முங்களுக்கு
மின்னே ரொளியை விமலன்
பிறவிசெய்தார்  -
அகிலத்திரட்டு
திரைகட லுலகில் இந்நாள்
தீயவர் தமையழித்து
தருமாதி யரைக் காத்த
சங்குசக்கரனே! கிருஷ்ணா!
வரைமறை சுமந்தசீலா,
வாரியில் துயின்ற மூலா!
தெருள் செக நாத தேவா!
சீக்கிரம் காக்க வாவா!! - 
காக்கும் பதிகம், அருள்
நூல்
10 - வது அவதாரம்: அய்யா
வைகுண்ட அவதாரம் (கலியுக
அவதாரம்)
யுகம்: கலி யுகம்
அவதார நோக்கம்: 
- கலிநீசனின்
காெடுமையிலிருந்து நம்மை
இரச்சித்துக் காக்க, 
- கலிநீசனுக்கு காெடுத்த
வரங்களைப் பறிக்க, 
- நாட்டில் கலி தாேசத்தை
அகற்றி தர்ம யுகமாக்கி
தரணியை அரசாள
பாண்டவர் தமக்காய்த்
தோன்றி
பகைதனை முடித்து மாயோன்
வீன்றிய கலியன் வந்த
விசனத்தால் கயிலையேகி
சான்றவர் தமக்கா யிந்தத்
தரணியில் வந்த ஞாயம்
ஆண்டவர் அருளிச் செய்ய
அம்மானை எழுதலுற்றேன் –
அகிலத்திரட்டு
ஆண்டாயிரத்து எட்டு மாசி
மாதத்திலே, கடலின்
கரையாண்டி
ஸ்ரீமந்நாராயணராகிய நானே
பண்டாரமாகத் தோன்றி
தெட்சணாப்புரியில் கூடி
தர்மமுற்று வைகுண்டராக
பள்ளி கொண்டோம் -
அகிலத்திரட்டு
ஆம், சான்றாேர்களே!
அகிலத்திரட்டின் படி
இந்நாள் வரைக்கும் நம்மை
இரட்சித்துக் காக்க
யுகம்தோறும் அவதரித்த
நாராயணர் மீண்டும்
தர்மயுகம் ஆள வருகிறார்..!
யுகம்: தர்ம யுகம்
அவதார நோக்கம்: நிகழும்
கலியுகத்தை அழித்து
நடுத்தீர்ப்பு நடத்தி
ஆகாத பேர்களை நரகிலும்,
ஆகின்ற பேர்களை
இரட்சித்து அழியாத
தர்மயுக வாழ்வளிக்க.
முப்பத்தி ரண்டறத்தால்
முகித்தசிங் காசனத்தில்
செப்பொத்த மாணாக்கர்
சேவிக்க இருபுறமும்
ஒப்பற்ற பொற்பதிக்குள்
உயர்ந்தசிங் காசனத்தில்
மறுமஞ்ஞ ரெதிரி வையகத்தி
லில்லாமல்
விறுமஞ்ஞ ரான வெற்றிவை
குண்டருமே
சிங்கா சனமிருந்து
தெய்வச்செங் கோல்நடத்தி
பொங்கா ரமான புவிதர்ம
ராச்சியத்தில்
ஆளுவா ரென்ற ஆகம நூற்படியே 
- அகிலத்திரட்டு
பரியவதார மாகிப்பரிசினை
யழிக்க உன்னும்
கரியனே கஞ்சத்தாளா!
கடையனேன் றனையாட் கொள்ள
அரியனே முறையோ மென்னும்
ஆலங்கேட் டிருக்கலாமே?
தெருள் செக நாத தேவா!
சீக்கிரம் காக்க வாவா!! - 
காக்கும் பதிகம், அருள்
நூல்
"கண்டெடுத்தாேர் வாழ்வார்,
காணாதார் வீணாவார்!" என்ற
அகிலத்திரட்டு
வாசகத்திற்கு இணங்க,
நாமும் ஏகம் படைத்துக்
காக்கும் ஆண்டவனைக்
கண்டுகாெள்வாேம், ஆண்டவர்
அருளிய உபதேசங்களை ஏற்று
தர்ம வழியை பின்பற்றி
தர்மராஜ்யத்தை
உருவாக்குவாேம்! வாழ்வில்
வெற்றி பெறுவாேம்!
#அய்யா உண்டு
Ref:
http://ramakjn.blogspot.com/2006/06/yugas-avatars.html
Like
Comment
Share
Submit your reply
==============================================================================

 Next 1 >>

Showing results 0 to 1 of 323

 Print this Page
       

==============================================================================