VijayramOnline Blogging
===========================================================================
Subject: பிறந்தோம் வாழ்ந்தோம் இறந்தோம்!
Message: #3  2024-04-27  
Thom Karuvil Irunthom Lyrical Video Song _ Star Movie Songs _
Prashanth _ Jyothika _ AR Rahman - YouTube.html
Submit your reply    

===========================================================================
Subject: பிறந்தோம் வாழ்ந்தோம் இறந்தோம்!
Message: #2  2024-04-27  
வீடுவரை உறவு | Veedu Varai Uravu | Kannadasan,T.
M. Soundararajan | Tamil Superhit Song
Submit your reply    

===========================================================================
Subject: பிறந்தோம் வாழ்ந்தோம் இறந்தோம்!
Message: #1  2024-04-26  
பிறந்தோம் வாழ்ந்தோம் இறந்தோம் என்று சொல்வதற்கல்ல மனித வாழ்க்கை 
– ஈஸ்வரபட்டர்

 

உணர்வால் உந்தப்படும் அச்சமுடன் கூடிய எண்ணத்தால் ஒவ்வொரு நொடிப் 
பொழுதும் எடுக்கும் சுவாச முறை கொண்டு
1,வாழ்க்கை நெறி வழியிலும்
2.குடும்பச் சுழற்சிச் செயலிலும்
3.பந்த பாசச் சுற்றத்தாரின் உணர்வுடன்
4.இந்த உணர்வின் எண்ணத்தையே வெளிப்படுத்தினால்
5.வைத்தியனால் பலரின் உணர்வு எண்ணமுடன் கலந்து
6.அவர்களின் வியாதிக்கு இவர் எண்ணத்தைச் செலுத்திச் செலுத்தி அதனுடன் 
கூடிய சுவாசத்தை எடுப்பதனால்
7.இந்த வைத்தியனுடைய உணர்வே அவ் ஈர்ப்பின் பிடியில் சிக்குண்டு
8.அவ்வலைத் தொடர் எண்ணம் கொண்ட செயலுடனேயே ஒன்றிவிடும்.

ஆகையினால் வைத்தியர்களின் பெரும்பாலோரின் வாழ்க்கை நிலை அமைதி 
கொண்ட இன்ப இல்லற குடும்ப வாழ்க்கை அமையாமல் அவர்களின் வாழ்க்கையே 
அமைதியற்ற நிலையில் தற்கொலைக்குத் தன்னை ஆட்படுத்திக் கொள்ளக்கூடிய 
சுழற்சியுடன் ஊன்றிவிடுகின்றது.

அதே போன்று விஞ்ஞானத்தில் தன் ஞானத்தை வளரவிடுபவர்களும் எவ் அலை 
ஈர்ப்பில் தன் உணர்வின் எண்ணத்தைச் செலுத்தி தன் ஞானத்தை எவ் விஞ்ஞானச் 
செயல் கண்டு எவ் ஒரு மாற்றப்படைப்பைத் தன் அறிவின் ஞானம் கொண்டு 
உருவாக்க முற்படுகின்றார்களோ அதே ஈர்ப்பின் சுழற்சி வட்ட அலைத் தொடருடன் 
எண்ணத்தை ஒன்றிவிடுகின்றனர்.

தன் அறிவின் ஞானத்தால் அறியும் புதிய விஞ்ஞான அலையில் சிக்குண்டு 
அதனுடனே ஒன்றி தன் உணர்வின் எண்ணச் சுவாசத்தால் தன் ஆத்ம ஞானமும் 
அதுவாகவே உட்பட்டு விடுகின்றனர்.

அப்படிப்பட்ட விஞ்ஞானி தன் குடும்ப வாழ்க்கையையோ உற்றார் சுற்றார் 
மற்றோரின் எண்ண அலையை மனிதச் சுழற்சி நெறி முறை பழக்க 
வழக்கங்களையும் அறியும் தன்மை அற்று விடுகின்றனர்.

எந்த ஆராய்ச்சி ஈர்ப்பின் பிடி அலையில் சிக்குண்டனரோ பசி தாகம் 
மற்றெல்லா உணர்வுகளையும் மறந்து அவற்றின் பிடிக்குத் தன் ஞான 
அறிவின் ஆத்மாவையே செயலாக்குபவனுக்கு
1.வாழ்க்கையில் ஏற்படும் எவ் எதிர் நிலையான எதிர்ப்பையும் ஏற்க 
முடியாத தன்மையில்
2.விஞ்ஞானத்தால் தன் அறிவின் ஞானம் கொண்டு பல புதிய 
செயற்கைச் செயல்களைச் செய்விக்கும் அந்த விஞ்ஞானி
3.தன் உணர்வின் ஞானத்தில் அமைதி கொண்ட வாழ்க்கையை 
அமைக்க முடியாமல்
4.தற்கொலைப் பிடிப்பில் தன்னையே மாய்த்துக் கொள்கின்றான்.

ஆகவே உணர்வால் செலுத்தும் எண்ணம்…
1.எவ் ஈர்ப்பலையையும் தன் உடலுடன் எடுத்துக் கொள்ளும் செயலாக 
ஒன்றாமல்
2.தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்ளும் செயலாக இவ்வெண்ணம் 
செயல்பட வேண்டும்.

ஒன்றைக் கொண்டு பலவற்றை வளர்க்க வேண்டும் என்றால் அவ் ஒன்றான 
விதையை புழு பூச்சி அரிக்காமல்… சொத்தைப் பட்டு வெடிப்பு ஏற்படாமல்… 
விதை நன்றாக இருக்க வேண்டும்.

அப்படிப் பாதுகாக்கப்பட்ட அந்த விதையைத் தான் பக்குவப்படுத்திய 
நிலத்திலிட்டுப் பயிராக்கி அதன் மகசூலாகப் பல விதையை எடுக்க முடியும்.

அதைப் போன்று மனித வித்தின் வளர் வித்து ஆத்மாவை எப்படியப்பா வளர்ப்பது..?

நம் ஆத்ம ஜீவனை… இஜ்ஜீவனுடன் கூடிய உடலின் உணர்வால்
1.எண்ணத்தில் எடுக்கும் செயல் கொண்டு
2.நற்சத்தான வித்தாக்கி அந்த வித்தைக் கொண்டு
3.பல வித்துக்களை எடுக்க வேண்டும்.

பிறந்தோம்… வளர்ந்தோம்… மணந்தோம்.. பிள்ளைகளைப் பெற்றோம்… என்ற 
வழித் தொடரில் வளர்ப்பதல்ல ஆத்ம வித்தின் சக்தியை…!
Submit your reply    

===========================================================================

 Next 1 >>

Showing results 1 to 3 of 730

 Print this Page
       
===========================================================================